தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அதில் விஜய், விக்ரம் இருவரும் இருப்பார்கள், இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர், இதில் விஜய் சமீபகாலமாக மெகாஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் விஜயின் திரைப்படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகின்றன.
விஜய், விக்ரம் இருவருமே நல்ல நண்பர்கள், விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தநலையில் விஜய் பல மெகா ஹிட் திரைப்படங்களை தவிர விட்டுள்ளார்.
தளபதி விஜய் தவறவிட்டுள்ள திரைப்படத்தில் பல நடிகர்கள் நடித்து மெகா ஹிட்டான கதை தெரிந்த விஷயம்தான், அப்படி விஜய் தவறவிட்ட ஒரு இத்திரைப்படத்தில் விக்ரம் நடித்த ஹிட்டாகியுள்ளது. விஜய் தூள் திரைப்படத்தை தவற விட்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தூள் இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, விவேக், பரவை முனியம்மா, மயில்சாமி, பசுபதி என பலரும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் கதை முதன்முதலாக விஜய்க்காக தான் தாரணி எழுதியுள்ளார் அதன்பிறகு விஜய் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகுதான் விக்ரமிற்கு சென்றது.
விக்ரம் நடித்த படமும் மெகா ஹிட்டானது இதனைத் தொடர்ந்து தரணி விஜய்யுடன் கில்லி திரைப்படத்தில் மீண்டும் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.