தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார், அது மட்டும் இல்லாமல் வசூல் மன்னனாக வலம் வருகிறார், இந்தநிலையில் விஜய் இடத்தை பிடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு நிகராக பல முன்னணி நடிகர்களும் ஹிட் கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் நடிகர் சூர்யா நீண்ட காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்தார் ஆனால் சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் அதிலிருந்து மீண்டு ஹிட் கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இதனைத்தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்து எந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதே அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார், அடுத்ததாக பாண்டிராஜ் கதையில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் கதையில் ஏற்கனவே இந்த கதையை பாண்டிராஜ் விஜயிடம் கூறியுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இதற்கு முன் விஜய்-முருகதாஸை கழட்டிவிட்ட உடன் சூர்யா முருகதாஸ் அவர்களிடம் சென்று ஏதாவது கதை இருந்தால் கூறுங்கள் இணைந்து பணியாற்றலாம் என கூறி இருந்தாராம் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
இதில் இருந்து தெரிகிறது விஜய் வேண்டாம் என ஒதுக்கிய இயக்குனர்களுக்கு தேடித்தேடி சென்று வாய்ப்பு கொடுத்து வருகிறார் முன்னணி நடிகர் சூர்யா என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.