பிளாக் பஸ்டர் படங்களை மறுத்த விஜய்.! இதோ முழு லிஸ்ட்.

vijay
vijay

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக இருந்து வருபவர் தளபதி விஜய். தனது கடின உழைப்பாலும் தனித்துவமான நடிப்பின் மூலம் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிக்கின்ற அனைத்து படங்களுமே பெரிய வசூல் செய்து வருவதால் தற்பொழுது அவர் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்கி வருகிறார்.

சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தளபதி  விஜய்.  விஜய் அவர்கள் தனது திரைப்பயணத்தில் புது விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இருப்பினும் சினிமா உலகில் ஒரு சில முக்கிய படங்களை அவர் தவறவிட்டுள்ளார் என்று கூறவேண்டும்.

அந்த வகையில் இவர் தவறவிட்டு உள்ள படங்களை மற்ற நடிகர்கள் தேர்ந்தெடுத்து நடித்து தனது திரை உலக பயணத்தை மாற்றிக்கொண்டுயுள்ளனர்.மேலும் அவர்கள்  மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளனர்.தளபதி விஜய்  தவறவிட்ட படங்கள் என்னவென்று தற்பொழுது பார்ப்போம்.

1.உன்னை நினைத்து, 2. தீனா, 3.அனேகன், 4.உள்ளத்தை அள்ளித்தா, 5.தூள், 6.ரன், 7.சிங்கம், 8.ஆட்டோகிராஃப், 9.சண்டக்கோழி, 10.வேட்டை, 11.முதல்வன்.