சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு இயக்குனரும் ஒரு ஹீரோவை மனதில் வைத்துதான் ஒரு படத்தின் கதையையும் உருவாக்குகின்றனர் ஆனால் சில காரணங்களால் அந்த ஹீரோ அந்த படத்தை தவற விடுகின்றனர் அந்த இயக்குனரோ வேறு வழியில்லாமல் புதுமுக மற்றும் அனுபவம் வாய்ந்த ஏதோ ஒரு நடிகரை வைத்து படத்தை எடுத்து வெற்றி கண்டு வலம் வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கேஎஸ் ரவிக்குமார் பார்த்து பார்த்து எழுதிய கதைதான் ராணா. ஆனால் அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உடம்பு கோளாறு செய்ததால் வேறு வழியின்றி இந்த படத்தை பாதியிலேயே கைவிடப்பட்டது.
அதனால் இனிமேல் இந்த படத்தை எடுக்க வேண்டாம் என கே எஸ் ரவிகுமார் கைவிட பார்த்தார். ஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரான பிரபு என்பவர் படத்தை விட வேண்டாம் படத்தின் கதை சிறப்பாக இருக்கிறது வேறு ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை எடுங்கள் என கேட்டுள்ளார்.
பின்பு உடனடியாக கேஎஸ் ரவிக்குமார் தளபதி விஜய்க்கு இந்த படத்தின் கதையை கூறியுள்ளார். அனைத்து சரியாக இருந்தாலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடரமுடியாமல் போனது பின் வேறு வழியின்றி கேஎஸ் ரவிக்குமார்.
ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற பெயரில் அனிமேஷனை பயன்படுத்தி எடுத்து இருந்தார். படம் வெளிவந்து ஓரளவு வசூலை அள்ளியது. இந்த படத்தில் தளபதி விஜய் நடித்து இருந்தார் முதல் அனிமேஷன் திரைப்படத்தில் நடித்த தளபதி விஜய் இருந்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.