டாப் 10 நடிகர்களில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த விஜய்.! அஜித் இருக்கும் இடத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..

ajith vijay
ajith vijay

பொதுவாக சினிமாவை பொருத்தவரை மிகவும் பாப்புலராக இருந்து வரும் நடிகர் நடிகைகளின் லிஸ்ட் மாதத்திற்கு ஒரு முறை இணையதளத்தில் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் இவ்வாறு செய்வது ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் தற்பொழுது இந்த மாதம் வெளியான லிஸ்டில் முதலிடத்தை தமிழ் பிரபலம் பிடித்துள்ளார்.

அதாவது டாப் 10 நடிகர்களில் முதலிடம் விஜய்க்கு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நாயகனாக இருந்து வரும் நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் இவருடைய படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியாகி தாறுமாறாக வெற்றியைப் பற்றி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய அளவில் பாப்புலரான நடிகர்களில் முதலிடத்தை விஜய் பிடித்து சோசியல் மீடியாவில் கெத்து காட்டி வருகிறார்.

இவரை தொடர்பு இரண்டாவது இடத்தினை தெலுங்கு பிரபலம் பிரபாஸ் பெற்று இருக்கிறார், மூன்றாவது இடம் ஜூனியர் ஆர்டிஸ்ட், நான்காவது இடத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ஐந்தாவது இடம் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ், ஆறாவது இடத்தினால் ராம்சரண், ஏழாவது இடத்தினை பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் பெற்றிருக்கிறார்.இதனை தொடர்ந்து எட்டாவது இடம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கும், ஒன்பதாவது இடம் தமிழ் நடிகரான சூர்யாவுக்கும் கிடைத்துள்ளது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் தல அஜித் இந்த லிஸ்டில் கடைசியாக பத்தாவது இடத்தினை பிடித்திருக்கிறார் என்பது மிகப்பெரிய அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது அஜித் 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தினை வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது.