Thalapathy 68 : தளபதி விஜய் ஒரு படத்தை முடிப்பதற்குள்ளையே இன்னொரு படத்தில் கமிட்டாகி விடுவது வழக்கம் அந்த வகையில் லியோ படத்தை முடித்த கையோடு தளபதி 68 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க உள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என பேச்சுக்கள் அதிகம் உலாவுகின்றன. படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இந்த நிலையில் விஜய் வெங்கட் பிரபுவுக்கு சில கண்டிஷன்கள் போட்டு திக்கு முக்காட வைத்துள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
ஏம்பா ஏய் விஜய் என்ன சொன்னாலும் நீ உருட்டுவியா .. லோகேஷ் உடன் மல்லு கட்டும் ப்ளூ சட்டை மாறன்
படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியே கசிய கூடாது. நான்கு மாதங்கள் படத்தை பற்றிய அனைத்து வேலைகளையும் தீவிரமாக பார்க்க வேண்டும் என விஜய் கண்டிஷன் போட்டுள்ளார் இதெல்லாம் வெங்கட் பிரபுக்கு ஓகே தானாம். ஆனால் அதுக்கப்புறம் போட்ட கண்டிஷன் தான் வெங்கட் பிரபுவே ஆட்டம் காண வைத்துள்ளது.
விஜய் சொன்னது என்னவென்றால்.. ஆறு மணிக்கு மேல் எடுக்கும் அவதாரங்களை எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விடவேண்டுமாம் அது மட்டும் இன்றி சென்னை 600028 கூட்டத்தை கொஞ்சம் தூரம் வைத்துக் கொள்ளும்படி வெங்கட் பிரபுவுக்கு கூறி உள்ளார்.
லியோ படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு இதுதான்.? உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்
வெங்கட் பிரபு அவருடைய படத்தில் பெரும்பாலும் அவருடைய தம்பி நடிப்பார் அல்லது அந்த படம் முழுக்க அவருடன் இசையமைப்பது ஏதோ ஒரு வகையில் ஓடிக்கொண்டே இருப்பார் மேலும் சென்னை 600028 டீம் அந்த படத்தில் நடிப்பார்கள் ஆனால் இதை எல்லாத்தையும் விஜய் கண்டிஷன் போட்டு ஒதுக்கி உள்ளதால் இதை வெங்கட் பிரபு சரியாக கடைபிடிக்கப் போகிறார் என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.