சினிமா வாழ்க்கைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த விஜய்.? இதோ அவரே கூறிய தகவல்

vijay
vijay

திரை உலகில் வசூல் மன்னனாக ஓடுவர் தளபதி விஜய். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து லியோ நடித்து வருகிறார். லோகேஷ் இயக்க படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் லலித்குமார் இயக்குகிறார்.

அனிருத் இசையமைத்து வருகிறார் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் உருவாகி உள்ளது. படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஷ்மீர் போன்ற பல முக்கிய இடங்களில் எடுக்கப்பட்டு ஒரு வழியாக முடிந்தது இதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைய இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன இப்படி இருக்க மறுபக்கம் தனது மக்கள் இயக்கத்தை அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேற்றிக் கொண்டே வருக்கிறார் விஜய்.

அண்மையில் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கிய விஜயின் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிட்ட அளவில் பெரிய வெற்றிகளை பெற்றனர் இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுக்காக விஜய் பல தடவை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து மீட்டிங் போட்டு பேசி வந்து கொண்டே இருக்கிறார்.

நேற்று கூட தளபதி விஜய் பனையூரில் தனது மக்கள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் மற்றும் ரசிகர்களை வரவைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது இந்த ஆலோசனையில் விஜய் பேசியது என்னவென்றால்.. தான் அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.