தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் தொடர்பு ஆக்சன் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார் கடைசியாக இவர் நடித்த வாரிசு படம் செண்டிமெண்ட் படமாக இருந்தாலும் ஆக்சன் அசத்தலாக இருந்தது அதனை தொடர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருவதாக படத்தின் இயக்குனரே பேட்டி ஒன்றில் கூறினார். லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது அதனை தொடர்ந்து தளபதி விஜய் முதல் முறையாக அஜித் பட இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்.
ஆம் ஆறு மாசத்திற்கு முன்பாகவே வெங்கட் பிரபு அரசியல் சம்பந்தமான ஒரு படத்தை விஜய்க்கு சொன்னாராம் அந்த கதை ரொம்ப பிடித்து போய் இருந்தாலும் வெயிட் பண்ணுங்கள் ஓகே சொல்கிறேன் என கூறினார் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஓகே சொல்லி உள்ளாராம்.
தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படம் அரசியல் படம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என பலரும் கூறி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் படம் பண்ண இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கே ராஜன் விஜய் பற்றி பேசியுள்ளார் மெர்சல் படத்தில் விஜய் ஐடி ரெய்டு குறித்து உடனே அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார். அரசியல் பேசி அதிகம் விஜய் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் தற்பொழுது மத்திய அரசை விஜய் அதிகம் பேசுவதில்லை என கூறினார்.