தளபதி விஜய் தனது 66வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி வித்தியாசமான ஒரு கோணத்தில் இயக்கிவருகிறார் மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கிறார் இந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சங்கீதா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படம் இதுவரை எப்படி இருக்கும் என லைட்டாக கூட கணிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.
ஏனென்றால் இந்த படம் அந்த அளவிற்கு வித்தியாசமாக ஒரு முறையில் எடுத்து வருகிறாராம் தளபதி விஜய் இந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக நடிக்க உள்ளார். பென் குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ் மகனாக நடித்த அத்வைத் வினோத் தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்கிறார்.
விஜயின் பீஸ்ட் படத்தில் சின்ன ரோலில் நடித்த குழந்தை ஹர்சிதா கார்த்திக் இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கிறார் என்ற செய்தி கிடைத்து உள்ளது. இவர்கள் இருவரும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வம்சி உடன் பயணிப்பது எங்களுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் என கூறி சில பதிவுகளை வெளியிட்டு புகழ்ந்து பேசி உள்ளனர்.
இதை அனைத்தும் வைத்து பார்க்கையில் நிச்சயம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகி வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் எனவும் சொல்லுகின்றனர்.