தளபதி விஜய் கடைசியாக நெல்சன் உடன் கை கோர்த்தது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்தார் இந்த படம் கோலாகலமாக ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியானது இதுவரை விஜயின் திரைப்படங்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்..
ஆனால் இந்த படத்தில் அது சற்று குறைவாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று பீஸ்ட் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் படம் ஓரளவு நல்ல வசூலை ஈட்டி உள்ளதால் தற்போது படக்குழுவும் சற்று நிம்மதி அடைந்து உள்ளது இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பாக கோலமாவு கோகிலா , டாக்டர் ஆகிய படங்களை கொடுத்துள்ளார்.
ஆனால் அது போல இந்த படம் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்து உள்ளது இந்த நிலையில் ரஜினியின் 169 திரைப்படத்தையும் நெல்சன் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவி வந்தது.
ஆனால் ரஜினியோ பீஸ்ட் படத்தைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தாராம் இதனால் 169 படத்திற்கான வாய்ப்பை கொடுக்கலாமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்து விட்டாராம் இந்த நிலையில் ஒரு தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது தளபதி விஜய் ரஜினிக்கு போன் செய்து இயக்குனர் நெல்சன் நல்ல திறமைசாலி..
அவர் மீது எந்த குறையும் இல்லை படத்தில் கதையில் சில மாற்றங்களை நான் தான் செய்ய சொன்னேன் என போன் செய்து சொல்லி உள்ளார் இதனால் ரஜினி நிம்மதி அடைந்து 169 திரைப்பட வாய்ப்பு கொடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.