நான் வாங்கிய சம்பளத்தை விட குறைவாக வாங்கிய விஜய்.! உண்மையை உடைத்த மன்சூர் அலிகான்

vijay
vijay

Vijay : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. படத்தில் விஜயுடன் கைகோர்த்து மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா, அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் படப்பிடிப்பு அனைத்து முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டுகிறது.

லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.  படம் வெளிவருவதற்கு நாட்கள் இருப்பதால் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு கொடுத்த வண்ணமே இருக்கிறது நான் ரெடி பாடலை தொடர்ந்து படத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் தொடர்ந்து லியோ படத்தை பற்றி பேசி வருகின்றனர்.

அப்படி அண்மையில் மன்சூர் அலிகான்  படத்தில் அனுராக் காஷ்யப்  கதாபாத்திரம் பற்றி பேசினார் அதாவது அவர் சொன்னது இவர் படத்தில் வந்தாரு டப்பு டப்புன்னு சுட்டாரு போனாரு என கூறினார். அதனைத் தொடர்ந்து விஜய் பற்றி தற்பொழுது பேசிய உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்  விஜயும், நானும் ஆரம்பத்தில் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளோம்..

அப்பொழுது என்னுடைய சம்பளம் 4 லட்சம் விஜய் சம்பளம் 2 லட்சம் தான்..  அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தற்பொழுது இந்த இடத்தில் இருக்கிறார் தற்பொழுது இவ்வளவு சம்பளம் வாங்கும் இடத்திற்கு அவர் முன்னேறுகிறார் இந்த வயதிலையும் நடிகைளுக்கு டஃப் கொடுத்து டான்ஸ் ஆடிட்டு வருகிறார்.

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலில் சூப்பராக நடனமாடியிருந்தார் இந்த வயசில் நடனம் ஆடுவது  ரொம்ப பெரிய விஷயம் இப்போ இந்த சம்பளம் வாங்குவது அவருக்கு கிடைத்த பலன் என கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தின் வைரலாகி வருகிறது.