கிளைமாக்ஸ் சீன் பிடிக்கல ஷூட்டிங்கில் ஓவராக பேசிய விஜய்.? கடைசியில் அவரையே மாற்றிய பிரபல இயக்குனர்.!

vijay
vijay

சினிமா ஆரம்பத்தில் இயக்குனர்கள் தான் கட்டி ஆண்டனர் அவர்கள் சொல்லும் கதைக்கு ஏற்றார் போல அனைத்து நடிகர்களும் நடித்தனர் குறிப்பாக சிவாஜி முதல் எம்ஜிஆர் வரை இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்தனர். அதனால் தான் அவர்களுடைய படங்கள் அனைத்துமே தொடர்ந்து வெற்றியை பெற்றன.

ஆனால் தற்பொழுது ஹீரோக்களுக்காக இயக்குனர்கள் கதையை உருவாக்குகின்றனர் இதனால் இயக்குனர்கள் சுதந்திரமாக ஒரு படத்தை எடுக்க முடியவில்லை.. அப்படிப்பட்ட நடிகர்கள் தான் தற்பொழுது ஏராளம் அவர்களில் ஒருவர் விஜய்.. ஆரம்பத்தில் இவர் தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய படங்களில் தான் நடித்து வந்தார்.

ஆனால் அந்த படங்களில் பெருமளவு வெற்றியை இவருக்கு பெற்று தரவில்லை இதனால் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அப்படித்தான் விக்ரமுடன் கைகோர்த்து “பூவே உனக்காக” படத்தில் நடித்தார். இந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பிறகு விஜய்யின் சினிமா பயணம் சற்று உயர்ந்தது. இதனை தொடர்ந்து விக்ரம்னுடன் மீண்டும் கைகோர்த்து “உன்னை நினைத்து” திரைப்படத்தில் நடித்தார்.

முதலில் இரண்டு பாடல்கள் எடுக்கப்பட்டது அதன் பிறகு அடுத்த அடுத்த காட்சிகள் எடுக்கப்பட்ட வந்ததாம் அப்பொழுது விஜய்க்கு கிளைமேக்ஸ் காட்சி பிடிக்கவில்லை மாற்றம் செய்ய முடியுமா என இயகுனரிடம் கேட்டு இருக்கிறார் அதற்கு விக்ரமன்.. இதுவரை நான் நினைத்ததை மட்டுமே எடுத்து இருக்கிறேன் உங்களுக்காக நான் காட்சியை மாற்றினால் என்னால் சுதந்திரமாக வேலை பார்க்க முடியாது.

ஒவ்வொன்றுக்கும் உங்களுக்கு பிடித்து இருக்க என யோசித்து யோசித்து வேலை பார்க்க வேண்டியதாக இருக்கும் எனவே இந்த படத்தில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் நான் வேறு ஒரு ஹீரோவை வைத்து முழு படத்தையும் எடுத்துக் கொள்கிறேன் என வெளிப்படையாக கூறினார். அதன்படி சூர்யாவை வைத்து படம் எடுத்தார் வெளிவந்து ஹிட் அடித்தது.