தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து விஜய் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தில் விஜயுடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இரண்டு கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் வெகு விரைவிலேயே சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படம் குறித்தும், விஜய் குறித்தும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்த நிலையில் விஜய் குறித்து தற்போது ஒரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது அதாவது தளபதி விஜய் instagram பக்கத்தில் இணைந்துள்ளார் அவர் இணைந்த அரை மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் அதைப் பின்பற்ற தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தளபதி விஜய் பெயரில் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் ஆகி இருந்தது அதை ஏற்கனவே பல ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்..
அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். முதலில் விஜய் லியோ பட ஸ்டில்லை பதிவிட்டு ஹலோ நண்பா, நம்பி என போட்ட பதிவிட்டார். இது இணையதள பக்கத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதோ தளபதி விஜயின் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீங்களே பாருங்கள்..