தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கிறது. அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றி கரமாக நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை ஹச். வினோத் இருக்கிறார்
போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ளது இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்துள்ளனர்
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு தோழர்களுமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகுவதால் இந்த பொங்கல் ரேஸில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இரண்டு படங்கள் வெளிவந்த பிறகு தான் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள் என்று பார்த்தால் வெளி வருவதற்கு முன்பாகவே மோதிக் கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அஜித் – விஜய் குறித்து பேசி இருக்கிறார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்..
தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் அஜித்தை விட விஜய் மிகப்பெரிய நடிகர் என்பதால் கூடுதலாக 50 திரையரங்குகள் கேட்ட பொழுது உதயநிதி மறுத்துவிட்டார் எனவே உதயநிதியை சந்தித்து மீண்டும் பேசியுள்ளதாக தெரிவித்தார். தில் ராஜுவின் இந்த பேச்சிய சமூக வலைதள பக்கத்தில் கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.