இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், என ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் கநகராஜ் இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படத்தில் இணைய உள்ளனர். இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படத்தின் ப்ரீ புரோடக்சன் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு விபத்தில் தனது ஒரு கையை இழந்துவிடுகிறான் பின்னர் உலோக கைகள் வைத்து குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறார் என்று குறிப்பிட்டு உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
விரைவில் இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். மேலும் லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்து விஜய் உடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவின் இரும்புக்கை மாயாவி திரைப்படத்தின் அப்டேட் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.