விஜய்யின் அடுத்த படம் பற்றி உண்மையான அப்டேட்டை கொடுத்த முக்கிய பிரபலம்.!

vijay-tamil360newz
vijay-tamil360newz

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது, ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவால் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது தகவல் வெளியானது அதுமட்டுமில்லாமல் இசை அமைப்பாளராக தமன் இசையமைக்க இருக்கிறார் எனவும் கூறினார்கள்.

இந்தநிலையில் இந்த திரைப்படம் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என கூறினார்கள், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்ததால் அடுத்ததாக விஜய் துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை ரசிகர்கள் உறுதி செய்யப்பட்டதாக கொண்டாடினார்கள்.

ஆனால் தற்பொழுது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது நான் துப்பாக்கி படம் மட்டுமல்லாமல் இன்னும் பல திரைப்படங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளேன் இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஹின்ட் இல்லை எனவும் கூறியுள்ளார் விஜயின் அடுத்த படம் துப்பாக்கி இல்லை என கூறப்படுகிறது.