தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருபவர் தளபதி விஜய். உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று விடும் ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்து. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கலாம் என்று அதற்கான வேலையை செய்து வந்தார்கள் ஆனால் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்க்கு பல நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதன் காரணமாகத் தான் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் விஜய்யை பற்றி எந்த தகவல் வந்தாலும் அதனை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாகி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜயின் பேஸ்புக்கை எவ்வளவு பேர் பின்பற்றுகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதுவரையிலும் 7.5 மில்லியன் பேர் தளபதி விஜயின் ஃபேஸ்புக்கை பின்பற்றி வருகிறார்கள். ஃபேஸ்புக்கில் யாரை அதிகமாக ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள் என்ற லிஸ்டில் விஜயின் பெயரும் உள்ளது.