தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்த வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த்..
பிக் பாஸ் ஜனனி, திரிஷா என பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருகின்றனர்.
லியோ படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான இயக்குனர்களையும் விஜய் தேர்வு செய்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் குறித்து ஒரு உண்மையை உடைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.. இவர் கூறியது.. பிரியமுடன் படத்தில் இருவரும் பணியாற்றிய போது 2000 ஆண்டிற்கு பின் நான் நடிக்கப் போவதில்லை..
நடிப்பை நிறுத்திவிட்டு இயக்குனராக வேண்டுமென்ற ஆசை இருக்கிறது என விஜய் கூறியிருந்தார். அவரே நினைத்துப் பார்க்காத அளவிற்கு 2000 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படங்கள் ஒவ்வொன்றும் மெகா ஹிட் அடித்ததால் இயக்குனராகும் முடிவை கைவிட்டு விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு தான் விஜய் மார்க்கெட் வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் தற்பொழுது மாஸ் நடிகராக திரையுலகில் ஓடிக்கொண்டிருக்கிறார்.
விஜய் இயக்குனராக மாறவில்லை என்றாலும் அவருடைய மகன் சஞ்சய் தற்பொழுது இயக்குனராக மாறி விஜயின் ஆசையை நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.