தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது இவர் பீஸ்ட் என்ற தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் ஒரு சிறந்த நடிகராக,எந்த சர்ச்சையும் இல்லாமல் இருந்து வந்தாலும் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான பெற்று வெற்றிப் படங்களைத் தந்து வந்தாலும் இவரின் மீது ஏகப்பட்ட காதல் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது.
அந்தவகையில் இவர் சில நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுகிறார் என்ற தகவல் அப்போதே பத்திரிகையில் வைரலானது. அந்த வகையில் ஒரு நடிகைதான் சங்கவி. சங்கவி மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடிக்கும் பொழுது இவர்களின் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருப்பதாக பலரும் கூறி வந்தார்கள்.
அதோடு விஜய் மற்றும் சங்கவி இருவரும் மிகவும் நெருக்கமாகப் பழகுவதாகவும் பத்திரிக்கையாளர்கள் பெரிய அளவில் பிரபலமடைய செய்தார்கள் .சங்கவி விஜயின் அப்பா இயக்கி படங்களின் மூலம் தான் சினிமாவில் பிரபலமடைந்தார்.இதன் மூலம் விஜய் மற்றும் சங்கவி மிகவும் நெருக்கமாக பழக அது ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறியுள்ளது.
எனவே விஜய் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சங்கவி பார்ப்பதற்காக அவரின் வீட்டுக்கு செல்வது வழக்கமாக வைத்திருந்துள்ளார்.இந்த தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீப யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் சங்கவியை பார்ப்பதற்காக விஜய் செல்வார் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.எனவே ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இந்த தகவல் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.