ஒரு சில நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சின்னத்திரையில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஒரு நடிகர் தற்போது வானத்தைப் போல சீரியலில் நடித்து வருகிறார்.
அது வேறு யாரும் இல்லை நடிகர் தமன் குமார் தான் இவர் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தளபதி விஜய் இவருக்கு கொடுத்து அட்வைஸ்சை தற்பொழுது வரையிலும் பின்பற்றி வருவதாக கூறியுள்ளார் தற்போது தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தற்பொழுது சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில் வானத்தைப்போல சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கண்மணிபாப்பா மற்றும் யாழினி ஆகிய திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
அதில் முக்கியமாக கண்மணி பாப்பா திரைப்படம் மிகவும் திரில்லான படமாகும் அதில் தமன் குமாருக்கு மகளாக பேபி மானஸ்வி நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முன்பே முழுவதுமாக முடிந்து விட்டது.
எனவே தற்போது லாக் டவுன் முடிந்தவுடன் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்மணி பாப்பா திரைப்படத்தில் ஸ்ரீ மணி இயக்க, ஸ்ரீ சாய் தேவா இசையமைத்தும், எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
மதன்குமார் ஐடிஐ துறையில் பணியாற்றி வந்தார் அதன் பிறகு இவருக்கு சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் முதலில் எஸ்ஏசி இயக்கத்தில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இத்திரைப்படத்தில் முதலில் ஆடிஷன் நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொண்டு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தமன் குமாருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இத்திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தமன் குமாருக்கு காலில் அடி பட்டுள்ளது.
அவ்வப்பொழுது சூட்டிங்கை பார்க்க வந்த விஜய் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது கூடுதல் அக்கறையோடு இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்தாராம். அதோடு இத்திரைப்படம் ரிலீஸ்சான பிறகும் இவரின் சிறந்த நடிப்பை பார்த்து விஜய் பாராட்டினாராம். அப்பொழுது சொன்ன விஜயின் அட்வைஸை தற்போது வரையிலும் கடைபிடித்து வருவதாக தமன் குமார் சமீப பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.