விஜய் போடும் புது ரூட்… வலிமையை வெல்வாரா… கே ஜி எஃப்-யை சமாளிப்பாரா.!

kgf-2
kgf-2

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும்  மாபெரும் வெற்றியடையும் என பலரும் கூறி வருகிறார்கள்.

அதற்கு காரணம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் படக்குழு அரபி குத்துப்பாடல் வெளியிட்டது அந்த பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது அதேபோல் இது திரைப்படத்தை காண விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தளபதி விஜய் அவர்களும் பீஸ்ட் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார். இந்த நிலையில் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்துக்காக ஒரு புது ப்ளான் போட்டுள்ளார்.

வலிமை திரைப்படத்தைப் போல் பீஸ்ட் திரைப்படத்திற்கும் அதிக திரையரங்குகளை வாங்கிவிட வேண்டுமென மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதி கே ஜி எஃப் 2 வது பாகம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது கே ஜி எஃப் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால் இரண்டாவது பாகம் இதற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை ஏப்ரல் 14ம் தேதிக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.  அதுமட்டுமில்லாமல் எப்படியாவது KGF  திரைப்படத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் வலிமை திரைப்படத்தை விட அதிக திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும் அதன் மூலம் வலிமை வசூலை முறியடிக்க வேண்டும் என விஜய் பக்காவாக பிளான் செய்துள்ளார்.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அப்படி இருக்கும் வகையில் விரைவில் பீஸ்ட் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.