Comedy actor Indrans : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் தற்போது நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரசை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஆக வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பல தொழிலதிபர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், அரிசயல் பிரமுகர்கள், அரசு உழியர்கள், சாமானிய மக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவியை மத்திய மாநில அரசுக்கு செய்து வருகின்றனர்.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் மாஸ்க் அணிந்து சமுக இடைவெளியை பின்பற்றி வர வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அனைவரும் ஒரே நேரத்தில் சனிடைசர், மாஸ்கிக்காக மெடிக்கலில் குவிகின்றனர். எனவே மாஸ்க் மற்றும் சனிடைசர், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடுக்கு காரணம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் தயாரிப்பு நிருத்தப்பட்டதே காரணமாகும். எனவே பலரும் மாஸ்க், சனிடைசர், கையுறை போன்ற உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தற்போதுள்ள சூழலில் மருத்துவர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள், மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கே மாஸ்க் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் விதமாக கேரள அரசாங்கம் சிறைக் கைதிகளுக்கு மாஸ்க் தயாரிப்பது எப்படி இன்று சிறைச்சாலையில் பயிற்சி அளித்துள்ளனர். இதற்காக நண்பன் படத்தில் நடித்த மலையாள நடிகர் இந்திரன்ஸ் தானே முன்வந்து சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுக்கு மாஸ்க்கு தயாரிப்பது எப்படி என்று பயிற்சி அளித்து வருகிறார். இந்திரன்ஸ் செயலைப் பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.