vijay : தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் லியோ. படத்தை லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி உள்ளார் விஜயுடன் இணைந்து படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஷ்மீர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது அடுத்த கட்டமாக டப்பிங் பணிகளை நோக்கி படக்குழு நகர்ந்து உள்ளது படம் வருகின்ற ஆயுத பூஜை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் சிறப்பாக போய்க்கொண்டிருக்க மறுபக்கம் விஜயை தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற இப்பொழுது அடித்தளம் போட்டு வருகிறார். 2026 தேர்தலில் விஜயை தனது கட்சியின் பலத்தை காண்பிப்பார் என பலரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் அவருக்கு பலரும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
பலர் விஜயை விமர்சிக்கின்றனர். அவர்கள் சொல்வது என்னவென்றால்.. சக நடிகர்களை முதலில் மதிக்க வேண்டும் அவர்களுடன் இப்போதும் போட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்த நடிகர்களின் ரசிகர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கூறி விமர்சித்தனர். இதை உணர்ந்த விஜய் தற்பொழுது ஒரு முடிவையும் எடுத்துள்ளார்.
அதாவது அஜித்தை பற்றி இனி யாரும் தவறான புகைப்படமோ அல்லது போஸ்டரையோ அடிக்க கூடாது என தனது ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். இதற்குக் காரணம் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் குறிப்பாக திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அதிக ரசிகர்கள் அவருக்கு இருப்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் அஜித் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து உள்ளார் விஜய்.