சினிமாவில் பல நடிகர்களுக்கு வேறொரு நடிகர்தான் டப்பிங் கொடுத்து இருப்பார்கள் அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரை படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் ரவிசங்கர். இவர் வில்லனாக நடித்தது மட்டுமல்லாமல் பல ஹீரோக்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து பிரபலம் அடைந்துள்ளார்.
விஜயின் திரைப்படத்தில் அண்ணன் தம்பி இருவருமே வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர். ஆதி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார் சாய்குமார் அதேபோல் தம்பி ரவிசங்கர் வேட்டைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலம் அடைந்தவர் இவர் வேட்டைக்காரன் படம் மட்டுமல்லாமல் ஆதிபகவான், சிலுக்குவார் பட்டி சிங்கம் என பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ரவிசங்கர் 1000 மேற்பட்ட திரைப்படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் டப்பிங் கொடுத்தது மட்டுமல்லாமல் அதற்கு விருதுகளையும் வாங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு டப்பிங் கொடுத்து கிட்டத்தட்ட 15 விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.
அதிலும் குறிப்பாக விஜய்யின் பல திரைப்படங்களுக்கு இவர்தான் குரல் கொடுத்துள்ளாராம். கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருக்கும் வித்யாதிற்கு இவர்தான் குரல் கொடுத்தார் அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளியாகிய குருவி, பகவதி என பல திரைப்படங்களுக்கு இவர்தான் குரல் கொடுத்தார்.
அதேபோல் போக்கிரி திரைப்படத்திலும் போலீசாக நடித்திருக்கும் முகேஷ் திவாரிக்கும் இவர்தான் குரல் கொடுத்தார். மேலும் அருந்ததி திரைப்படத்தில் அடியே அருந்ததி என்ற வசனம் மிகவும் பிரபலம் அந்த வசனத்திற்கு குரல் கொடுத்தவர் இவர்தான் இப்படி பல திரைப்படங்களுக்கு குரல் கொடுத்து 15க்கும் மேற்பட்ட விருதுகளை தட்டிச் சென்றுள்ளார் ரவிசங்கர்.