Master movie update : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார், இவர்களுடன் இணைந்து ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் என முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இந்த திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்பு மற்றும் பட ரிலீஸ் என அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் ஒரு சில திரைப்படங்கள் ஆன்லைனில் ரிலீஸாகி வருவதால், மாஸ்டர் திரைப்படமும் ott தளத்தில் வெளியாக இருப்பதாக, சமீபத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வந்தது. இந்த நிலையில் OTT தளத்தில் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வெளியாகாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்கள். மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் திரைபடத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸாக வைத்திருப்பதாக கூறப்பட்டது, தற்போது இந்த தகவல் இணையதளத்தில் தீயாக பரவிவரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் 20 சதவிகிதப் பணிகள் தான் மீதம் இருப்பதாகவும் எப்பொழுது வெளியானாலும் கொண்டாட்டம் நிறைந்த படமாக அமையும் என லோகேஷ் கனகராஜ் அதிரடியாக கூறியுள்ளார்.