விஜய் படத்தை முதல்நாள் பார்பேன் – அஜித் படத்தை பார்க்க மாட்டேன்.! காரணத்தை சொல்லி ரசிகர்களை அதிர வைத்த எஸ். ஏ. சந்திரசேகர்.

vijay-and-ajith
vijay-and-ajith

எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் நடிகராகவும் சினிமா உலகில் பயணித்து வருகிறார் முதலில் விஜயகாந்த் போன்ற நடிகர்களை வைத்து 80 90 காலகட்டங்களில் பல சிறப்பான படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தனது மகன் விஜய்யை சினிமாவுலகில் அறிமுகப்படுத்தி அப்போது அவரையும் மிகப்பெரிய அளவில் வளர்த்து விட்டுள்ளார்.

எஸ் ஏ சந்திரசேகர் விஜயை வைத்து நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தை முதலில் இயக்கினார் அதன்பின் விஜயை வைத்து இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றியை ருசித்தன அது என்ன என்பது குறித்து பார்ப்போம். ஒன்ஸ்மோர், சுக்கிரன், ரசிகன் நெஞ்சினிலே உட்பட பல படங்களை கொடுத்துள்ளார் அதன்பின் சினிமா உலகில் ஒரு கட்டத்திற்கு மேல் படங்களை இயக்காமல் நடிக்கவும் ஆரம்பித்தார்.

எஸ் ஏ சந்திரசேகரன் அந்த வகையில் இப்பொழுது கூட இவர் நடிப்பில் வெளியான டிராபிக் ராமசாமி, கேப்மாரி, மாநாடு போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது ஆனால் இவர் இயக்கிய ஒரு சில படங்கள் தோல்வியை தழுவி உள்ளன அந்த வகையில் டிராபிக் ராமசாமி குமரி ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமா உலகில் எதுவாக இருந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஓடும் எஸ் ஏ சந்திரசேகர் விஜய் படத்தை முதல் நாளில் பார்த்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதை தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களை முதல் நாளே பார்த்தாலும் அஜித் படத்தை மட்டும் முதல் நாளில் பார்க்காமல் இருந்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இது குறித்து அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் சொன்னது : விஜய் படத்தை முதல் நாளே பார்த்து அதன் பின் மற்ற நடிகர்கள் யார் படம் வந்தாலும் முதல் நாளே பார்த்துவிடுவேன் ஆனால் அஜித் படத்தை மட்டும் பார்க்கவே மாட்டேன் காரணம் விஜய்க்கும் அஜித்துக்கும் நல்ல நட்பு இருந்திருந்தாலும் ரசிகர்கள் தனித்தனியாக பிரித்து வைத்து சண்டை போடுகின்றனர்.

நான் இப்பொழுது அஜித் படத்தை முதல் நாளே பார்த்தால் இதையும் ஒரு பெரிய விஷயமாக எழுதிவிடுவார்கள் ரசிகர்களுக்கும் நல்லா கிசுகிசு கிடைத்துவிடும் அதை தவிர்க்கவே வேறு வழி இல்லாமல் அஜித் படத்தை பார்ப்பதை தவிர்த்து வருவதாக கூறினார். மேலும் அஜித் குறித்து பேசியதை நான் பலமுறை சந்தித்து உள்ளேன் அவர் சினிமாவைப் பற்றி நிறைய என்னிடம் பேசுவார் நல்ல மனிதர் என கூறினார் எஸ் ஏ சந்திரசேகர்.