காலம் கடந்து விட்டது விஜய் படத்துக்கு அவ்வளவு காசு கொடுக்க முடியாது.? அதிர்ச்சி கொடுத்த தியேட்டர்கள்.?

vijay
vijay

அண்மை காலமாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படங்களாக மாறுகின்றன அந்த வகையில் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து பெரிய அளவில் தயாரித்து அதிக திரையரங்குகளில் வெளியிட்டுபடத்தை பெரிய அளவில் வெற்றி படமாக மாறியது அதேபோல தற்போது விஜயின் பீஸ்ட் இப்படத்தையும் அதிகளவில் திரையரங்குகளில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படம் ரிலீஸாகி இருக்கிறது ஆனால் மற்ற இடங்களில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக முடித்துள்ளது. அந்த வகையில் கேரளாவில் ஒரு விநியோகஸ்தர்கள் பீஸ்ட் படத்தை 5 கோடி அளவுக்கு பேரம் பேசியுள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை 8 கோடிக்கு வேறு ஒரு நிறுவனத்திடம் பேசியது.

ஆனால் அவர் கடைசி நேரத்தில் காலை வாரி விட வேறு வழியில்லாமல் வேறு ஒருவரிடம் 8 கோடிக்கு மீண்டும் பேசி உள்ளது ஆனால் கேஜிஎப் திரைப்படம் ஏற்கனவே இங்கு பல திரையரங்குகளை கைப்பற்றிய முடித்துவிட்டது இப்படி இருக்கின்ற நிலையில் 8 கோடி செட்டாகாது 5.5 கோடி என்றால் ஓகே என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் டீல் பேசியுள்ளார்.

இதுக்கு அப்புறம் வேறு வழி இல்லை என கருதி சன் பிக்சர்ஸ் திமுக 5.5 கோடி ஒருவழியாக முடிந்ததாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு முன்பாகவே கேஜிஎப் திரைப்படம் 10 கோடிக்கு விலை போய் பெரும்பாலான திரையரங்குகளை கைப்பற்றி விட்டதாம். வேறு வழி இல்லாமல் இந்த தொகைக்கு முடிக்க வேண்டியதாகி விட்டதாம்.