விஜய்யின் பீஸ்ட் பட நடிகையின் ரொமான்டிக் வீடியோ.!

2012ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் முகமூடி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றார்.

முகமூடி திரைப்படம் தமிழில் வெளியாகிய முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெற வில்லை அதனால் பூஜாவிற்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது கவனத்தை செலுத்தினார்.

ஹிந்தியில் ரித்திக் ரோஷன் அவர்களுடன் இணைந்து மொஹஞ்சதாரோ என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பூஜா ஹெட்டே அவர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் தெலுங்கில் ராசியான நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களான என்டிஆர், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்ததால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இந்த நிலையில் இவர் கடைசியாக நடித்த அளவைகுந்தாபுரம்லோ என்ற திரைப்படம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தது பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

இந்த நிலையில் பிரபாஸ் அவர்களுடன் இணைந்து நடித்துள்ள ராதேஷியாம் என்ற திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன அதில் சில திரைப்படங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா தனது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

இந்த நிலையில் இவர் நடித்துள்ள மோஸ்ட் எளிஜிபல் பேச்சிலர் என்ற திரைப்படம் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் வீடியோ பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் மிகவும் ரொமான்டிக்காக நடித்துள்ளார் இந்த பாடல் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.