பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நடிகைக்கு கொரானா.!

vijay movie actress movie

தற்பொழுது விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்றிருந்தார். அந்தவகையில் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேற்று சென்னை வந்தார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தோற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு  விஜய் பட நடிகை ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதியாகி உள்ளதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  அதோடு மட்டுமல்லாமல் பல திரைப்பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்த வகையில் ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுருதி ஹாசன், நந்திதா ஸ்வேதா மற்றும் விஜய் உட்பட இன்னும் பல திரைப்பிரபலங்கள் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் புலி.  இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த நடிகைகளில் ஒருவராக நடித்திருந்த நந்திதா ஸ்வேதாவிற்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் தற்போது தனிமைப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

nanthitha
nanthitha

தற்பொழுது நந்திதா ஸ்வேதா ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் நடித்து நடிக்கிறார். அந்தவகையில் இத்திரைப்படத்தை ரவிக்குமார் சுப்பிரமணியன் இயக்குகிறார்.இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.