சூப்பர் ஹிட் திரைப்படத்தை தவறவிட்ட விஜய்.! கெட்டியாக பிடித்துக்கொண்டு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய நடிகர்.!

vijay
vijay

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் பல இயக்குனர்கள் ஒரு நடிகரை நினைத்து கதையை எழுதுவார்கள் ஆனால் அந்த கதையில் அந்த நடிகர் நடிக்க முடியாமல் போகும் வேறு ஒரு நடிகர் நடிப்பார். அப்படிதான் தமிழ் சினிமாவிலும் பல இயக்குனர்கள் ஏதாவது ஒரு முன்னணி நடிகரை நினைத்து கதையை எழுதுவார்கள் ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அந்த நடிகர் நடிக்க முடியாமல் போகும் பிறகு இளம் நடிகர்களை வைத்து அந்த கதையை இயக்கி வெற்றி காண்பார்கள்.

அப்படிதான் விஜய் தவறவிட்ட ஒரு திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார் பிரபல நடிகர். அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் விஷால் தான் இவர்தான் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி சண்டக்கோழி திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் மீரா ஜாஸ்மின் மோனிகா கஞ்சா கருப்பு என பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் வசூலில் 30 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. ஆனால் உண்மையில்  சண்டைக்கோழி திரைப்படம் விஷாலுக்கு எழுதப்பட்ட கதை கிடையாதாம். விஜயை நினைத்து தான் முதன் முதலில் சண்டக்கோழி திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்  கதையை விஜய் இடமும் கூறியுள்ளார்.

ஆனால் தளபதி விஜய் பல திரைப்படங்களில் நடித்து வந்ததால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கால்சீட் இல்லாமல் போனது அதனால் இந்த திரைப்படத்தின் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அந்த சமயத்தில் விஷால் செல்லமே திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று இருந்ததால் அவரை வைத்து சண்டக்கோழி திரைப்படத்தை இயக்கினார்.

விஷால் நடித்ததால் இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது அதன் பிறகு தான் விஷால் இந்த திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.