முடியாது என மறுத்த விஜய்.! துணிந்து நடித்த அஜித்.. மெகா ஹிட்டடித்த திரைப்படம்.!

ajith vijay-tamil360newz
ajith vijay-tamil360newz

தல அஜித் மற்றும் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் ஆவார்கள் இவர்கள் நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவு பால் அபிஷேகம், கட்டவுட் என ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பாரகள்.

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தாமதம் ஆகிறது, அதேபோல் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படமும் ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,.

இன்று முன்னணி நடிகர்களாக உயர்ந்து நிற்கும் முன்னணி நடிகர்களின் சினிமா பயணத்தை பார்த்தால் அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் தான் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும், அதேபோல் சில நடிகர்களின் சினிமா வாழ்க்கையை ஒரு சில திரைப்படம் தான் திருப்பிப் போட்டு விடும்.

அந்தவகையில் ஆரம்ப காலத்தில் நடிகர் அஜித் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக உதவியாக இருந்த திரைப்படம் காதல் கோட்டை இந்த திரைப்படம் தேசிய விருது பெற்ற திரைப்படம், இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிப்பதற்கு விஜயை தான் அணுகினார்கலாம் ஆனால் விஜய் நடிக்க முடியாது என பதில் வரவே தயாரிப்பாளர் உடனே படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்பதற்காக அஜித்தை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தாராம்.

அஜித்திற்கு இந்த திரைப்படம் சினிமா திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.