லிங்குசாமியின் டாப் 3 திரைப்படங்களை தவறவிட்ட விஜய்..! இதுவரையிலும் ஒன்று சேராத கூட்டணி..

vijay
vijay

திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை வைத்து எப்படியாவது ஒரு படமாவது  பண்ணி விட வேண்டும் இயக்குனர்கள்  வழக்கம்  ஆனால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை எடுத்துக்காட்டு தளபதி விஜய் வைத்து லிங்குசாமி ஒரு படத்தையாவது ஒரு படமாவது  எடுத்து விட வேண்டும் என்பது அவரது ஆசை ஆனால் அந்த ஆசை இதுவரை நடந்தே இல்லை..

முதலில் இயக்குனர் லிங்குசாமி ஒரு சூப்பரான கதையை விஜய் இடம் சொல்லினார் அது அவருக்கும் பிடித்து போகவே இருப்பினும் நூல் இழையில் அந்த படம் பண்ண முடியாமல் போனது பிறகு மாதவன் நடித்த ரன் படத்தின் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் தான் சொல்லி இருக்கிறார் ஆனால் அந்த படமும் அப்பொழுது நடைபெறாமல் போனது.

பிறகு சண்டக்கோழி படத்தின் கதையை சொல்லி இருக்கிறார் விஜய்க்கு ரொம்ப பிடித்து படம் பண்ண இருந்தது ஆனால் கடைசி நேரத்தில் விலகவே விஷால் அந்த படத்தில் சூப்பராக நடித்து படத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் அடுத்ததாக ஆர்யா, மாதவன் நடிப்பில் உருவான வேட்டை படத்தின் கதையையும் விஜய்க்காகத் தான் லிங்குசாமி உருவாக்கி வைத்திருந்தாராம்.

ஆனால் அந்த படத்தையும் அவர் தவற விட்டார். லிங்குசாமி  மூன்று கதைகளையும் விஜய்க்காக  எழுதினாலும் அதில் நடிகர் விஜய் நடிக்க முடியாமல் போனது லிங்குசாமிக்கு ரொம்பவும் மன கஷ்டத்தை கொடுத்ததாம் ஆனால் தொடர்ந்து முயற்சித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் லங்குசாமி வெகுவிரைவிலேயே தளபதி விஜய் வைத்து ஒரு சூப்பரான படம் பண்ண வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது அது வெகு விரைவிலேயே நடக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.