தளபதி விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார் ஆனால் இவர் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திடீரென இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார் அது மட்டுமில்லாமல் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.
பல கோடி சம்பளத்தை விட்டு விட்டு மக்களுக்காக அரசியலுக்கு வரும் விஜய்யை பல ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள். இந்த நிலையில் தளபதி விஜய் தன்னுடைய கேரியரில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதேபோல் ஒரு சில கதையை வேண்டாம் என நிராகரித்து பிறகு வேறொரு ஹீரோ நடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது அந்த வகையில் விஜய் வேண்டாம் என நிராகரித்த ஒரு திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது அந்த தகவலை தற்பொழுது காணலாம்.
அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது விக்ரம் நடிப்பில் வெளியிய தள் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் கதையை தரணி முதன்முதலில் விஜய் அவர்களிடம் தான் கூறியுள்ளார் ஆனால் விஜய் ஓகே சொல்லவில்லை அதனால் தரணி அவர்கள் விக்ரம் அவர்களை பார்த்து கதையை கூறியுள்ளார் விக்ரம் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார் பிறகு தான் தூள் திரைப்படம் உருவானது.
தூள் திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, விவேக் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாக்கிய தூள் திரைப்படத்தை இன்று வரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள் இந்த திரைப்படத்திற்கு வித்தியாசாகர் அவர்கள் தான் இசையமைத்திருந்தார் இன்று வரை இந்த திரைப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டீசர் வெளியானது.. அட இப்படி ஒரு டைட்டிலா..
இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது ஆனால் நல்ல வசூல் வேட்டை நடத்தியது கிட்டத்தட்ட சுமார் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 12 முதல் 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.