தளபதி விஜய் தவறவிட்ட 4 மெகா ஹிட் படங்கள் – இப்போ நினைச்சு கூட ரொம்ப வருத்தப்படுறாராம்.!

vijay
vijay

திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் சில காரணங்களால் நல்ல கதைகளை தவறவிடுவார்கள் அந்த வகையில் தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தாலும் இவர் ஒரு சில நல்ல கதைகளை தவற விட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார். அவர் தவறவிட்ட மெகா ஹிட் படங்கள் என்னென்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. தரணி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் தூள் இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து ரீமாசென், ஜோதிகா, விவேக், பசுபதி, பரவை முனியம்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம்  ஆக்சன், காமெடி படமாக இருந்தது அப்போது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் கதை முதலில் விஜய்க்கு தான் சென்று இருந்தது. கதை சிறப்பாக இருந்தாலும் சில காரணங்களால் விஜய்  மறுக்கவே விக்ரமுக்கு போனதாம்.

2. 2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த பட்டையை கிளப்பிய திரைப்படம் ரன். இந்த வருடத்தில் மாதவனுடன் கைகோர்த்து மீரா ஜாஸ்மின், விவேக் ஆகியவர்கள் நடித்திருந்தனர் இந்தப் படமும் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியது. இந்த படத்தின் கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் சில காரணங்களால் மறுத்துவிட்டாராம்.

3. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் படம் முதல்வன் இந்த படத்தை முதலில் ரஜினியை மனதில் வைத்து தான் ஷங்கர் எழுதினாராம் ரஜினி அந்த சமயத்தில் அரசியலில் நுழைய உள்ளார் என பல செய்திகள் பரவியதால் இந்த படத்தை தவறவிட்டார். பிறகு விஜயிடம் சென்றது விஜய்யும் இந்த படத்தை மறுக்கவே கடைசியாக அர்ஜுன் துணிந்து நடித்தார் என கூறப்படுகிறது.

4. சூர்யா சினிமா ஆரம்பத்தில் நல்ல கதைக்காக ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தான் உன்னை நினைத்து படத்தின் கதை கிடைத்தது. விக்ரமன் இந்த படத்தை இயக்கியிருந்தார் சூர்யா, சினேகா, லைலா மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடியது சூர்யாவுக்கு பெயரை பெற்று தந்தது முதலில் இந்த படத்தில் விஜய்க்கு தான் சென்றது ரொம்பவும் பிடித்து படத்தில் நடித்தார். பிறகு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறினார்.