தேசிய விருது பெற்ற படத்தை தவறவிட்ட விஜய்.! அந்த படத்தில் நடித்து தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்ட நடிகர் யார் தெரியுமா.?

vijay
vijay

actor vijay refused to act award winning movie:சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அத்தகைய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் நடித்து வெளிவரும் படங்கள் திரையரங்குகளில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்பொழுது தல அஜித் அவர்கள் இளம் இயக்குனரான வினோத் உடன் கை கோர்த்து தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் தரையிறங்கி வெளிவர இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் மற்றும் டிரைலர் போன்றவை வெளியாகாமல் இருந்து வருகிறது இதனால் இருவரது ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வரும் சினிமா நடிகர்கள் ஆரம்பத்தில் ஒரு சில படங்களின் மூலம் பிரபலமடைந்ததோடு மட்டுமில்லாமல் முன்னேற்றத்திற்கு காரணமாகவும் அமைந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே. அதுபோல தல அஜித் அவர்களுக்கு காதல் கோட்டை படம் இன்றளவிலும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது.

kadhal kottai-tamil360newz
kadhal kottai-tamil360newz

இந்த படத்தில் முதலில் விஜய் அவர்களை நடிக்க கேட்டுள்ளார்கள் ஆனால் அவர் சில மாதங்கள் காத்திருங்கள் இப்போதைக்கு இதில் நடிக்க முடியாது என பதில் அளித்துள்ளார். தயாரிப்பாளர் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜித்துடன் இணைந்து இப்படத்தை உருவாக்கினார்கள். இதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தல அஜித். இப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.