ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய் பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்க்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அப்படி இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவ்வாறு விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர். விரைவில் விஜய் அரசியலுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது மறுபுறம் விஜய்யின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வருகிறார்கள். அதாவது சுனாமி, வெள்ளம், தொடர் மழை, கொரோனா போன்ற பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பொழுது மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.
இப்படி இதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் ரசிகர்கள் ஆரம்பித்திருக்கும் விலையில்லா விருந்து திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாகவே விஜய் ரசிகர்கள் தமிழக முழுவதும் விலையில்லா விருந்து என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள் அதனை சிறப்பாக நடத்தி வரும் நிலையில் 300 பேரை விஜய் சென்னைக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
Thalapathy personally invited 300+ members who contributed to Vilai illa virundhagam ❤️ He spoke with them & appreciated their work. @actorvijay #Leo #VijayMakkalIyakkam #Tvmi pic.twitter.com/fe9Sm7fd8x
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) April 28, 2023
மேலும் இது குறித்து விஜய் ரசிகர்களிடம் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் இந்த விலை இல்லா விருந்து திட்டம் என்ற உணவு திட்டத்தை எக்காரணம் கொண்டு நிறுத்தக்கூடாது அதற்காக பண உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள் நான் செய்கிறேன் இந்த திட்டம் மக்களிடம் கொண்டு போய் சேர என்னுடைய முழு ஒத்துழைப்பும் தருகிறேன் என கூறியுள்ளாராம்.