விஜய் நடித்த மெகா ஹிட்டான கில்லி திரைப்படத்தின் வசூல் என்ன தெரியுமா?

ghilli
ghilli

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவே கொண்டாடித் தீர்க்கும் ஒரு முக்கியமான நடிகர், இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளது, இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகிய பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள் அதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. விஜய் தன்னுடைய சினிமா பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தது கில்லி படத்தின் மூலம்தான், விஜய் அவர்களை ரசிகர்களிடம் அடுத்த கட்டத்திற்கு கொண்டாட வைத்தது கில்லி திரைப்படம் தான்.

2004ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தை தரணி அவர்கள் இயக்கியிருந்தார், இந்த நிலையில் கில்லி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் செம ஹிட் அடித்தது, கில்லி திரைப்படம் ஏழு கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது, ஆனால் இந்த திரைப்படத்தின் வசூல் 41 கோடிக்கு மேல் வசூல் செய்து லாபத்தை கொடுத்தது.