15 கோடிக்கு ஆசைப்பட்டு பாதாளக் குழியில் மாட்டிக்கொண்ட மாஸ்டர்.! அரசனை நம்பி புருஷனை இழந்து கதைதான்

vijay
vijay

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த பொங்களுக்கு வெளியாகிய திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் நீண்ட காலமாக ரிலீசாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே போனது.

அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்கள் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பயந்தார்கள். ஆனால் ஒரு சில திரையரங்க உரிமையாளர்கள் விஜயின் திரைப்படத்தை திரையரங்கில் ஒளிபரப்பினால் கண்டிப்பாக மக்கள் தைரியமாக படத்தை காண வருவார்கள் என கூறி கூறிவந்தார்கள்.

அதேபோல் திரையரங்கில் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது மக்களும் கூட்டம் கூட்டமாக படத்தை தான தைரியமாக வந்தார்கள். படம் வெளியாகி 15 நாட்களே ஆன நிலையில் திடீரென்று சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் தளத்திற்கு கொடுத்துவிட்டனர்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் செம காண்டில் இருக்கிறார்கள். மாஸ்டர் திரைப்படத்தை  அமேசான் நிறுவனம் அதிகாரபூர்வமாக படத்தை வெளியிட்டு விட்டார்கள் இதனால் திரையரங்க உரிமையாளர்கள் விஜய் மீதும் மாஸ்டர் படக்குழுவினர் மீதும் செம கடுப்பில் இருக்கிறார்கள்.

மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் நிறுவனத்திற்கு கொடுக்கக்கூடாது ஒப்பந்தப்படி இப்படி செய்யக் கூடாது என இரண்டு நாட்களாக மீட்டிங் போட்டு பேசி வருகிறார்கள் அந்த வகையில் திடீரென இப்படி செய்தது அவர்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள்.

ஒரு சில திரையரங்க உரிமையாளர்கள் விஜய் இந்த சூழ்நிலையில் நமக்கு படம் கொடுத்தது பெரிய விஷயம் எனவும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாமெனவும் அரைமனதுடன் ஒப்புக்கொண்டார்கள் என்னதான் நாம் அமேசான் நிறுவனத்தில் படம் ஒலிபரப்பப்பட்டாலும் திரையரங்கில் தொடர்ந்து படத்தை போடவும் முடிவு செய்துள்ளார்கள்.

இது அனைத்திற்கும் காரணம் வெறும் 15 கோடி தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு கிளம்பிவிட்டது.  திரையரங்க உரிமையாளர்கள் படத்தை ஒளிபரப்பி நல்ல வசூல் பார்த்துவிட்டு அதில் தயாரிப்பாளர்களுக்கு சரியான முறையில் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் நஷ்டக் கணக்கை காட்டி சங்கடப் படுத்தியுள்ளார்கள் அதனாலதன் தயாரிப்பாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள்.

அதனால் வெளிநாட்டு ரசிகர்கள் காரணம் காட்டி மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் எக்ஸ்ட்ரா 15 கோடி கொடுத்து மாஸ்டர் திரைப்படத்தை வாங்கிவிட்டார்கள் அதனால் அமேசான் தளத்தில் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டு வந்தன. மேலும் அமேசான் நிறுவனத்தில் விஜய் திரைப்படம் ஒளிபரப்புபட்டு விட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் விஜயின் அடுத்த திரைப்படத்திற்கு ஏதாவது தில்லுமுல்லு வேலையை செய்து விடுவார்கள் என பலரும் கூறி வருகிறார்கள்