விஜயின் தாய் மாமன் யார் தெரியுமா.? அட இவரும் சினிமா பிரபலமா..

vijay mama surendar : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல பாடகர்கள் கொடிக்கட்டி பறந்து வந்தார் அந்த வகையில் எஸ்பிபி ஏசுதாஸ், கங்கையமரன், மலேசியா வாசுதேவன், என பல ஆண் பாடகர்கள் ஜொலித்துக் கொண்டிருந்த காலத்தில் மீடியம் பாடகர்களும் ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தீபன் சக்கரவர்த்தி, அருள்மொழி ,ஜெயசந்திரன் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல் தன்னுடைய மெல்லிசை பாடல்களால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் பின்னணி பாடகர் சுரேந்தர். அதேபோல் இவர் பாடலை இன்றும் கேட்டால் கூட ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் இதெல்லாம் இவர் பாடிய பாடலா என பலரும் அதிர்ச்சி அடையும் அளவிற்கு பல பாடல்களை பாடியுள்ளார்.

அந்த வகையில் தளபதி விஜய்க்கு சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா ,பூவே பூவே பெண் பூவே ஆகிய பாடல்களும் அடங்கும் என்றென்றும் காதல் திரைப்படத்தில் சரக்கு சலக்கு பாடலும், ஊமை விழிகள் திரைப்படத்தில் கண்மணி நில்லு காரணம் சொல்லு, சேது படத்தில் மாலை எண் வேதனை கூடுதடி, காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் ஆனந்த குயிலின் பாட்டு, சூர்யாவிற்கு பொள்ளாச்சி மல ரோட்டுல ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

தனித்துவம் மிக்க நடுதரமான மென்மையான குரலால் பல பாடல்களை பாடியுள்ள சுரேந்திரன் இவரை ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள் அந்த வகையில் இவர் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது அதுமட்டுமில்லாமல் பாடல் வாய்ப்புக்காக இசையமைப்பாளர்களை தேடி இவர் சென்றதே கிடையாது ஆனால் சினிமாவில் 500 க்கும் மேற்பட்ட படலை பாடியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிகர்களான மோகன் மேலும் சில நடிகர்களுக்கு படங்களில் குரல் கொடுத்து வந்தார் அதிலேயே இவர் காலங்கள் போய்விட்டது. மோகனின் பல படங்களுக்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார் மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல இசைக்கச்சேரிகளுக்கு சென்றுள்ளார் அந்த வகையில் மோகனின் வெற்றியில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு ஆனால் இவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை.

இப்படி சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த சுரேந்திரர் வேறு யாரும் கிடையாது விஜயின் தாய் மாமா தான். பல ஹிட் பாடல்களை பாடி உள்ள இவர் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதற்கு காரணம் இவரை குறைவாகவே சினிமா பயன்படுத்திக் கொண்டது என கூறப்படுகிறது.

surendar
surendar