படிப்பில் சுட்டியாக இருக்கும் ஏழை மாணவியின் கல்வி தொடர விஜய் மக்கள் இயக்கம் செய்த பெரும் உதவி.! குவியும் வாழ்த்துக்கள்

vijay help
vijay help

விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் பலரும் பல்வேறு உதவிகளை செய்து வருவது நாம் அடிக்கடி சமூகவலைதளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வகையில் சமீபத்தில் வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்வதில் முதல் ஆளாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இருந்து வருகிறார்கள்.

அப்படிதான் ஏழை மாணவ மாணவியர்கள் படிப்பு உதவிக்காக விஜய் மக்கள் இயக்கத்தினர் அடிக்கடி உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கல்வி தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அஸ்வினி என்ற மாணவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளார்கள்.

ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அக்னி என்ற மாணவி தன்னுடைய படிப்பை தொடர மடியாமல் குடும்ப வறுமை காரணமாக இருந்து வந்தார்.  அதை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தார்கள்.

இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்நிலையில் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அஸ்வினி மற்றும் அவருடைய பெற்றோர்கள் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

vijay makkal
vijay makkal