புதிய முடிவுகளை எடுக்கும் தளபதி விஜய்.! 66 படப்பிடிப்பில் ஏற்படும் மாற்றம்.

vijay-
vijay-

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அன்று வெளியான பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றனர். முதல் நாள் விஜய் ரசிகர்களால் இந்த படம் நல்ல வசூலை பெற்று இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் படம் வசூலில் குறைந்து காணப்படுகிறது.

பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாளே கேஜிஎப் 2 படம் வெளியானதால் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் பீஸ்ட் படத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தளபதி விஜய் இந்த படத்தை எடுத்து முடித்த கையோடு உடனடியாக அவரின் 66வது படத்தில் கமிட் ஆகியுள்ளார் அப்படி விஜயின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்கள்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார் மேலும் விஜய்க்கு அப்பாவாக பிரபல நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதில் தளபதி விஜய் ஒரு மாற்றம் செய்துள்ளாராம். தமிழகத்தை சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த விஜய் படக்குழுவிடம் கேட்டுள்ளாராம். இந்தக் கோரிக்கையை படக்குழுவினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக  சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது இதில் 200க்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் வேலை பெற்று பயன் அடைவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.