விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி கடந்த 6 வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் 6வது சீசன் அக்டோபர் 9ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. அதில் விக்ரமன், ஜிபி முத்து, ஏடிகே, மகேஸ்வரி, அசல் கோளாறு, அசிம், ரக்ஷிதா, ஷெரீனா, ஆயிஷா, ஷிவின், ராம், கதிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்
மேலும் அவருக்கு ரூபாய் 50 லட்ச காசோலை, பிக்பாஸ் டிராபி மற்றும் கார் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக அரசியல் பிரமுகர் விக்ரமன் கலந்துக் கொண்ட நிலையில் இவரும் இந்நிகழ்ச்சியின் கடைசிவரையிலும் சென்று இரண்டாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் அசிம் அனைத்து போட்டியாளர்களிடம் சண்டை போட்ட நிலையில் வரம்பு மீறிய பேச்சையும் பேசி வந்தார்.
எனவே அசிமுடைய செயலை பார்த்த கமலஹாசன் அவர்களும் பலமுறை தண்டித்த நிலையில் ஆனால் அசிமால் அதனை மாற்றிக்கொள்ள முடியவில்லை இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியின் இறுதிவரை விக்ரமன், அசிம், ஷிவின் ஆகிய மூவரும் சென்ற நிலையில் விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அசிம் வெற்றி பெற்றார்.
இது பலருக்கும் பிடிக்கவில்லை எனவே விஜய் தொலைக்காட்சியை பலரும் புறக்கணித்து வந்த நிலையில் விஜே மகேஸ்வரியும் படும் மோசமாக அசிமை விமர்சனம் செய்தார். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சி முடிந்த பிறகும் தற்பொழுது வரையிலும் இவர்கள் சண்டையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் விஜே மகேஸ்வரி தன்னுடைய வீட்டில் பார்ட்டி வைத்திருந்த நிலையில் அதில் ரக்ஷிதா, ஷிவின், விக்ரமன், ஷெரீனா, ராம், ஏடிகே, அசல் கோளாறு ஆகியோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களை அடுத்து மற்ற யாரையும் மகேஸ்வரி அழைக்கவில்லை. முக்கியமாக இவர் அசிம் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரையும் அழைக்க மாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான் இவ்வாறு நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட சண்டை போட்டு வருவது சிறு பிள்ளை தனமாக இருக்கிறது.