தனது ரசிகர்களுக்கு புதிய வேண்டுகோள் விடுத்த “தளபதி விஜய்” – என்ன சொல்லியுள்ளார் தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய் சினிமா உலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து இலட்சக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் தற்பொழுது தனது 66வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு  போய்க் கொண்டிருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க ரெடியாக இருக்கிறது இதுவரை ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.

அண்மையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் துள்ளல் ஆட்டம் போட வைத்தது இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று தளபதி விஜய் சென்னையில் உள்ள பனையூரில் தனது முக்கிய ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளார். அப்பொழுது அவர் சொன்னது..

முதலில் குடும்பத்தை பாருங்க அடுத்து தொழில் அதன் பிறகு தான் சேவை என்பது.. சேவையை வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துச் செய்யுங்கள் அதற்காக கடன் வாங்க வேண்டாம் என விஜய் தெள்ளத்தெளிவாக கூறியுள்ளாராம்.. இந்த தகவல் தற்போது அனைத்து விஜய் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் பலருக்கும் போய் சேர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.