80 லி ருந்து இப்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடியவர் நடிகர் ராதா ரவி. இப்பொழுதும் கூட டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களும் நடித்து வருகிறார். அந்த வகையில் “சாமானியன்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திரை உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வந்த ராதாரவி தன்னுடைய அப்பா எம் ஆர் ராதா குறித்து அவ்வபொழுது ஊடகங்கள் மத்தியில் பேசி தான் வருகிறார். அப்பா எம் ஆர் ராதா பற்றி இவர் பேச காரணம் பல இருக்கிறது அதில் முக்கியமானது எம்ஜிஆரை எம் ஆர் ராதா சுட்ட விவகாரம் குறித்து உண்மை தகவல்களை ராதாரவி பகிர்ந்து வருகிறார்.
உண்மையில் நடந்தது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. “பெற்றால் தான் பிள்ளையா” என்ற படத்தை எம் ஆர் ராதாவின் நண்பர் வாசு என்பவர் தயாரித்தார் இந்த படத்தை எடுக்க எம் ஆர் ராதாவிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார் வாசு. படம் வெளியான பின் அந்த பணத்தை எம் ஆர் ராதா கேட்கும் போது ல் நிறைய செலவாகிவிட்டது என வாசு கூர..
இது பற்றி எம்ஜிஆரிடம் பேச எம் ஆர் ராதா மற்றும் வாசு இருவரும் ராமாபுரம் சென்றனர் அப்பொழுது வாக்குவாதம் முற்றியது ஒரு கட்டத்தில் எம்ஆர் ராதா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டார் அதில் எம்ஜிஆரின் தொண்டையில் குண்டு பாய்ந்தது அதன் பின்னர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு எம் ஆர் ராதா தற்கொலைக்கும் முயன்றார்.
சிகிச்சைக்கு பின்னர் இருவரும் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவத்தால் எம்ஜிஆரின் குரல் மொத்தமாக பாதித்தது எம் ஆர் ராதா பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் சில வருடங்கள் இருந்தார். இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய் தன்னிடம் கேள்வி கேட்டதாக சமீபத்திய ஊடகம் ஒன்றில் ராதா ரவி பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் என்னிடம் யாரும் கேட்காத ஒரு கேள்வியை கேட்டார்..
உங்க அப்பா எம்ஜிஆர் சுட்டு விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற அந்த ஜனவரி 12ஆம் தேதி மாலை உங்கள் வீட்டில் நீங்கள் எல்லாம் என்ன மனநிலைமையில் இருந்தீர்கள் என கேட்டார். நான் அசந்து போய்விட்டேன் ஏனெனில் இப்படி யாரும் யோசித்திருக்க மாட்டார்கள் அதன் பின் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லேன் என கூறினார். மேலும் பேசிய அவர் தற்பொழுது விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் ராதாரவி குறிப்பிட்டார்.