தளபதி விஜய் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகள் இது தானாம்.! பலருக்கும் தெரியாத தகவல்

vijay87

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தளபதி விஜய். உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்  நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தனது 65 திரைப்படமான பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நேற்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  அதோடு இத்திரைப்படத்தினை பற்றிய ஏராளமான தகவல் இணையதளத்தில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தளபதியின் பிறந்தநாளை நேற்று ரசிகர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி வந்தார்கள். அந்தவகையில் தளபதி விஜயை பற்றிய பல தகவல்கள் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் விஜய்க்கு பிடித்த உணவை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை கூறி உள்ளார்.

ஆம்,  தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு நான் வெஜ் தானம் அதிலும் முக்கியமாக மட்டன் குழம்பு, மட்டன் பிரை போன்ற உணவுகளை மிகவும் விரும்பி உண்பாராம்.இந்நிலையில் தற்பொழுது விஜய் முதன்முறையாக தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.  இத்திரைப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.