80, 90களில் ரஜினியின் சாதனையை நெருங்க எவருமில்லை என அப்பொழுது பேசப்பட்டது ஆனால் தற்பொழுது எல்லாமே மாறிவிட்டது ரஜினியின் படங்களுக்கு நிகராக விஜய் படங்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நெருங்குகிறது அப்படி விஜய் கடைசியாக நடித்த ஐந்து படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கு பார்ப்போம்..
பிகில் : விஜய்க்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவார் அந்த வகையில் அட்லி உடன் தெறி, மெர்சல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிகில் படத்தில் இருவரும் இணைந்தனர். படம் அதிரடி ஆக்சன் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் வெளிவந்து 300 கோடி வசூல் செய்தது.
எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. பிக் பாஸில் ஆண்டவரின் பேச்சை கண்டுகொள்ளாத 5 பிரபலங்கள்.!
மாஸ்டர் : 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை ஆக்சனுக்கு பஞ்சமே இல்லை. 135 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 285 கோடி வசூல் செய்தது.
பீஸ்ட் : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பீஸ்ட். மிகப்பெரிய ஒரு மாலை ரவுடிகள் ஹைஜாக் பண்ண பிறகு விஜய் உள்ளே இருந்து அவர்களை கொன்று குவித்து மக்களை காப்பாற்றுவது தான் படம் 150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 320 கோடி வசூல் செய்தது.
வாரிசு : கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படம். ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், பிரபு, சரத்குமார், ஜெயசுதாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாலமே நடித்திருந்தது 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 300 கோடி வசூலித்தது.
லியோ : லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து விஜய் நடித்த திரைப்படம் தான் லியோ படம் ஆரம்பத்திலிருந்து அதிரடி ஆக்சன் தான், படம் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் படம் அதிக நாட்கள் ஓடி சுமார் 540 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.