தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்கள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் அவர்கள் தளபதி விஜய் வைத்து திரைப்படம் இயக்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் தளபதி அறுபத்தி எட்டாவது திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியான காரணத்தினால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது மட்டுமில்லாமல் அதிக அளவு எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.
அதன்பிறகு இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை ஆகிய அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அதன்பிறகு இவர் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் விடுதலை என்ற திரைப்படத்தை மிக தீவிரமாக இயக்கி வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வாடிவாசல் திரைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதி யை வைத்து 68வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக வெற்றிமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார் அந்தவகையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே வெற்றிமாறன் விஜயை சந்தித்து தன்னுடைய கதையை கூறிவிட்டாராம்.
ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாகத்தான் இந்த திரைப்படம் தாமதத்தில் உள்ளது என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷின் ஆஸ்தான நமது இயக்குனர் வடசென்னை இரண்டாம் பாகம் படிப்பானது மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதன் பிறகு விஜய்யுடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.