கடந்த 2011ம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் ரமேஷ்பாபு தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காவலன், இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் விஜயுடன் இணைந்து அசின், ராஜ் கிரன், ரோஜா செல்வமணி வடிவேலு ஆகியோர் நடித்திருந்தார்கள்.
அதேபோல் காவலன் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்து இருப்பார் அசினுக்கு தோழியாக மித்ரா சூரியன் நடித்திருப்பார், இந்தத் திரைப்படத்திற்காக மித்ரா சூரியன் சப்போர்ட்டிங் கேரக்டர் என்ற பிலிம் ஃபேர் அவர்ட்க்கு நாமினேட் செய்யப்பட்டார்.
காவலன் திரைப்படத்தை தொடர்ந்து மித்திரா தமிழில் புத்தனின் சிரிப்பு, நந்தனம் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார், ஒரு கால கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.