இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
மேலும் இளைய தளபதி மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்க உள்ளார் என்று எப்பொழுதே அதிகாரபூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தளபதி 65 ஆவது திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 66வது திரைப்படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் தளபதி 66வது திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் அவர்கள் தான் இயக்கப்போகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் எச்.வினோத் தற்போது அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் முதலில் தளபதி 66வது திரைப்படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளர் சிறுத்தை சிவாவை அணுகினாராம் ஆனால் அவரால் முடியாத நிலையில் சிறுத்தை சிவா இயக்குனர் எச்.வினோத் அவர்களை சிபாரிசு செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.