அஜித் பட இயக்குனரோடு கைகோர்த்த விஜய்.! எப்படிப்பட்ட திரைப்படம் தெரியுமா.?

ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் இளைய தளபதி விஜய்.பெரும்பாலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து காதல் கதை அம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீப 10 ஆண்டுகளுக்கு மேலாக காதல் கதைகளில் நடிப்பதில்லை.

மேலும் ரசிகர்கள் சமீப காலங்களாக பழைய விஜய் பார்க்க வேண்டும் என நினைத்து வருகிறார்கள். அந்த வகையில் நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, ரசிகன், விஷ்ணு போன்ற திரைப்படங்கள் நடித்து விஜய் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற மேலும் இயக்குனர் விக்ரமின் பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலக்கில் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

இதன் பிறகுதான் மேலும் காதலுக்கு மரியாதை, ஒன் ஸ்மோர், நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் என தொடர்ந்து வரிசையாக காதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நேரத்தில் திருப்பாச்சி திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவன் பேட்டி ஒன்றில் விஜயுடன் பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்

மேலும் விஜய்க்கு இப்பொழுது சூப்பர் ஸ்டார் இமேஜ் வந்துவிட்டதாகவும் மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜயை மீண்டும் காதல் கதைகளை நடிக்க வைக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனனும் நடிகர் விஜயும் யோகம் அத்தியாயம் என்ற திரைப்படத்தின் மூலம் இணைய இருக்கிறார்கள். தற்பொழுது கௌதம் விஜையிடம் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே கூறியுள்ளார் விரைவில் விஜய் அவரை முழு கதை உடன் வர சொல்லியிருப்பதாக கூறியுள்ளார்.

இது தாமதம் ஆனதால் விஜய் ஏ ஆர் முருகதாஸுடன் துப்பாக்கி படத்தில் இணைந்து உள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விஜய் இருவரின் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவானால் இதன் மூலம் பழைய விஜய்யை பார்க்கலாம் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.